"மனசிலாயோ".. அனிரூத்.. மஞ்சு வாரியரோடு மாஸ் டான்ஸ் போடும் "தலைவர்" - வேட்டையன் பராக்!

Vettaiyan First Single : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "வேட்டையன்" திரைப்படத்திலிருந்து முதல் சிங்கள் பாடல் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

First Published Sep 9, 2024, 5:31 PM IST | Last Updated Sep 9, 2024, 5:31 PM IST

கடந்த 2023ம் ஆண்டு பிரபலக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 169 திரைப்படத்தை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, இந்த ஓராண்டுக்குள் இரு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருவது சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

கடந்த ஆண்டு இறுதியில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் "வேட்டையன்" திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அண்மையில் அந்த திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்தார். இப்போது தன்னுடைய "கூலி" திரைப்பட பணிகளில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி "வேட்டையன்" திரைப்படம் வெளியாகிறது. 

இப்பொது அப்படத்தில் இருந்து "மனசிலாயோ" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையில், இந்த பாடல் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகின்றது. சுமார் 27 ஆண்டுகள் கழித்து பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனுடைய குரல் இந்த திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Video Top Stories