லியோ தாஸ் வந்துட்டாரு.. லியோ படத்திலிருந்து 'Badass' ப்ரோமோ வீடியோ வெளியானது..!

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'லியோ' திரைப்படத்தின் இரண்டாவது  பாடலின் Glimpse வெளியானது.

Share this Video

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. 

உலகமெங்கும் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். 

பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் நேற்று லியோ படக்குழு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தெரிவித்திருந்தனர். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது என்றே கூறலாம்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் (Badass) எனக் குறிப்பிட்டு ஒரு போஸ்டரை படக்குழு பகிர்ந்திருந்தது. இதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாடலை எழுதிய விஷ்ணு எடவன் இந்த பாடலையும் எழுதியுள்ளார். 

அனிருத்தின் வாய்ஸில் வருகிறது. நிச்சயம் இந்த பாடலும் பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். ஆடியோ லாஞ்ச் ரத்து என்பதில் வருத்தமாக இருந்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Related Video