கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?
கோவாவிற்கு செல்ல ஐஆர்சிடிசி ஒரு சிறந்த பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த பயணத்தின் கட்டணம் மற்றும் பிற முக்கிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் அல்லது இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பலரும் நிச்சயமாக கோவாவுக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டு வருவது உண்மை. ஆனால் பணம் இல்லாததால் அவர்களால் இங்கு பயணம் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
ஏனென்றால் இந்திய ரயில்வே உங்களுக்காக சில சிறப்புச் சலுகைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்த தொகுப்பில் 3 இரவுகள் மற்றும் 4 நாட்கள் கடல் அலைகளை ரசிக்கலாம். இந்த பயணத்தின் சிறப்பு என்னவென்றால், இது உங்களுக்கு அதிக செலவு செய்யாது. ஐஆர்சிடிசி (IRCTC) கொண்டு வரும் இந்த பேக்கேஜில் விமான டிக்கெட்டுகள், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்குதல் மற்றும் உணவு ஆகியவை அடங்கும்.
இதுமட்டுமின்றி, சுற்றித் திரிவதற்கு வாகனமும் வழங்கப்படும். எனவே நீங்கள் இன்று கோவாவிற்கு சென்றிருக்கவில்லை என்றால், நிச்சயம் இந்த பயணத்தை மிஸ் பண்ணிடாதீங்க. ஐஆர்சிடிசியின் இந்த பேக்கேஜ் அடுத்த மாதம் அக்டோபர் 7 முதல் அக்டோபர் 9 வரை இருக்கும். லக்னோவில் இருந்து டூர் பேக்கேஜ் தொடங்கப் போகிறது.
எனவே நீங்கள் டெல்லி-NCR இல் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் முதலில் லக்னோ செல்ல வேண்டும். உங்கள் துணையுடன் இந்தப் பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்தத் தொகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோவா பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.30,800 செலுத்த வேண்டும். இந்த தொகுப்பில் இருந்து ஹோட்டல் கட்டணத்தை நீங்கள் கழித்து கொள்ளலாம்.
நீங்கள் ஹோட்டலில் செல்லவில்லை என்றால், ஒரு நபருக்கான கட்டணம் ரூ.29950. இவ்வளவு பணத்தில், பசிலிக்கா ஆஃப் போன் ஜீசஸ் சர்ச், அஞ்சுனா பீச், அகுவாடா கோட்டை, கோவாவில் உள்ள மங்கேஷி கோயில், அஞ்சுனா பீச் மற்றும் அகுவாடா கோட்டை போன்ற பல இடங்களை நீங்கள் சுற்றி பார்த்து அனுபவிக்கலாம்.
IRCTC இணையதளம் irctctourism.com மூலம் கோவா பேக்கேஜ் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இது தவிர, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாவிட்டால், லக்னோவின் கோமதி நகரில் உள்ள பர்யாதன் பவனில் இருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!