Raayan First Single: ஏ.ஆர்.ரகுமானின் மிரட்டல் இசையில்... தனுஷ் எழுதி பாடியுள்ள அடங்காத அசுரன் பாடல் வெளியானது!

நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள 'ராயன்' படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான 'அடங்காத அசுரன்' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published May 9, 2024, 6:43 PM IST | Last Updated May 9, 2024, 6:43 PM IST

நடிகர் தனுஷ் தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை யாருக்கும் கொடுக்காமல், தானே இயக்கி அதில் நடித்து முடித்துள்ளார். வடசென்னை பகுதியை சுற்றி நடக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், தனுஷை தவிர ஜெயராம் காளிதாஸ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட ஹீரோக்களும் நடித்துள்ளனர். 

படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில்... படக்குழு அவ்வப்போது இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ளது. அடங்காத அசுரன் என்கிற இந்த பாடலுக்கு லிரிக்கல் வரிகள் எழுதி ஏ.ஆர்.ரகுமானுடன் பாடியும் உள்ளார் தனுஷ். அதே போல் இந்த பாடலில் ஏ.ஆர்.ரகுமான் இசை ரசிகர்களை மெய் மறக்க செய்வதாக கூறப்படுகிறது.  
 

Video Top Stories