- Home
- Gallery
- சுடர் மேல் பழி போட்டு பல்பு வாங்கிய மனோகரி! எழில் கொடுக்கும் சர்பிரைஸ்.. நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
சுடர் மேல் பழி போட்டு பல்பு வாங்கிய மனோகரி! எழில் கொடுக்கும் சர்பிரைஸ்.. நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி சுடரிடம் சண்டை போட்டு எழிலிடம் பல்பு வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Ninaithen Vanthaai Serial
அதாவது மனோகரி சுடரின் ரூமை வேகவேகமாக தட்ட கதவை திறந்ததும் உள்ளே சென்று எல்லாவற்றையும் களைத்து போட்டு எதையோ தேட சுடர் என்ன தேடுறீங்க என்று கேட்டும் பதில் சொல்லாமல் தேடுகிறாள். அதன் பிறகு கனகவல்லி அங்கு வந்து என்ன தேடுற என்று கேட்க என் ஜெயினை காணோம், எல்லா பிராடு வேலையும் இவ தான் செய்வாள், அதனால் தான் இவ ரூமில் தேடுவதாக சொல்ல கவின் சோபாவில் இருந்ததாக ஜெயினை கொண்டு வந்து கொடுக்க கனகவல்லி சுடரிடம் மன்னிப்பு கேட்க சொல்லி மன்னிப்பும் கேட்க வைக்கிறாள்.
Ninaithen Vanthaai Serial
இதனையடுத்து சுடர் தன்னுடைய அப்பாவை கோவிலில் வைத்து சந்திக்க அவர் நீ என்கூடவே வந்துடு மா என்று கூப்பிட நீங்க ஒரு மாசத்துக்கு முன்னாடி கூப்பிட்டு இருந்தா வந்திருப்பேன் பா, இப்போ வந்தா அஞ்சலி ரொம்ப கஸ்டப்படுவா என்று சொல்கிறாள்.
Ninaithen Vanthaai Serial
பிறகு உன் அம்மா அக்காவை யார் கிட்ட கொடுத்தாலோ அந்த லேடியை பார்த்ததாக சொல்ல சுடர் அப்போ அக்கா சென்னையில் தான் இருக்காளா என்று சந்தேகப்படுகிறாள்.
Ninaithen Vanthaai Serial
அடுத்து எழில் குழந்தைகள் எல்லாரையும் கூட்டிட்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறான், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்றும் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.