Asianet News TamilAsianet News Tamil

பஸ் போகாது போனா தண்ணீரில் மாட்டிக் கொள்ளும்! எச்சரித்த நபர்! உதாசீனப்படுத்திய ஓட்டுநர்!இறுதியில் அலறிய பயணிகள்

கனமழை பெய்ததின் காரணமாக தரைப்பாளத்தில் வெள்ளம் தேங்கியிருந்தது. அந்த வழியாக பேருந்து வந்த போது பேருந்து போகாது என ஓட்டுனரிடம் ஒருவர் எச்சரித்தார்.

First Published May 16, 2024, 11:12 AM IST | Last Updated May 16, 2024, 11:12 AM IST

நெல்லை வள்ளியூர் ரயில்வே பாலத்தில் சூழ்ந்திருந்த நீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ரவிக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் தரைப்பாலம் வழியாக சென்றபோது அங்கு ஏற்கனவே கனமழை பெய்ததின் காரணமாக தரைப்பாளத்தில் வெள்ளம் தேங்கியிருந்தது. அந்த வழியாக பேருந்து வந்த போது பேருந்து போகாது என ஓட்டுனரிடம் ஒருவர் எச்சரித்தார்.

அதையும் மீறி பேருந்து ஓட்டுனர் பேருந்து போட்டி சென்றார். அப்பொழுது அருகில் இருந்த ஒருவர் போங்க மாட்டிக்கொள்வீர்கள் என கூறிய அடுத்த நிமிடத்தில் பேருந்து வெள்ளத்தில் சிக்கி கொண்டது. வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் கைக்குழந்தைகள், பெண்கள்  உட்பட 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் எமர்ஜென்சி எக்ஸிட் கதவை உடைத்து பத்திரமாக மீட்டனர். பயணிகளின் உயிரோடு விளையாடிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஓட்டுநர் ரவிக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

Video Top Stories