Asianet News TamilAsianet News Tamil

Nayanthara Temple Visit : காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா

நடிகை நயன்தாரா அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

First Published May 14, 2024, 11:32 AM IST | Last Updated May 14, 2024, 12:38 PM IST

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய நடிகை நயன்தாரா இன்று அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தரிசனம் செய்ய வருகை தந்தார். அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி சுவாமி தரிசனம் செய்தனர். 

அதனைத் தொடர்ந்து அங்குள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர். மேலும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் விக்னேஷ் சிவன் தலப்பாகை அணிந்து அய்யாவை தரிசனம் செய்தார். அவருடன் அவரது குடும்பத்தாரும் உடன் இருந்தனர்.

Video Top Stories