ஒகேனக்கல்லில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி; சுற்றுலா பயணிகள் ஆரவாரம்

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் சவாரி, பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Share this Video

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். இங்கு பரிசல் சவாரி மற்றும் ஆயில் மசாஜ், அருவியில் குளிப்பது, மீன் சமையல் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவையாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் பரிசல் சவாரி மூலம் அத்தி மரத்து கடவுள் பகுதியில் இருந்து பரிசல் மூலம் சென்று இயற்கை அழகை ரசித்து வருவது வழக்கம். 

படிக்கட்டுகள் உடைந்திருந்த நிலையில் அதனை சரி செய்து புதிய படிகட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நடைபெறும் போது பரிசல் இயக்க சுமார் இரண்டு மாதங்கள் பரிசல் சவாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் பரிசல் சவாரி மீண்டும் தொடங்கியுள்ளது. பரிசல் சவாரி துவங்கியதில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பரிசலில் சென்று மகிழ்கின்றனர்.

Related Video