MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vijay Deverakonda Net Worth: 35 வயதில் அசுர வளர்ச்சி.. விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Vijay Deverakonda Net Worth: 35 வயதில் அசுர வளர்ச்சி.. விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இன்று தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 09 2024, 04:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. தன்னுடைய பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை தன்னுடைய ஊரிலேயே முடித்த இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அந்த வகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் ரவி பாபுவின் இயக்குனர் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக வெளியான 'நுவ்விலா' படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கவில்லை என்பதால், அடுத்தடுத்த படங்களிலும் துணை நடிகராக நடிக்கும் வாய்ப்பே இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து ஹீரோவாக இவர் நடிக்க முயற்சி செய்து வந்த நிலையில், ஒருவழியாக கடந்த 2016-ஆம் ஆண்டு 'பெல்லி சூப்புலு' என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Sai Pallavi Birthday: சாய் பல்லவி 'தண்டேல்' ஷூட்டிங்கில் செய்த அமர்க்களம்! படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!
 

37

இந்த படத்தின் வெற்றி, அடுத்தடுத்த படங்களின் வாய்ப்பை விஜய் தேவரகொண்டாவுக்கு பெற்று தந்தது. விஜய் தேவரகொண்டாவை மொழி கடந்து ரசிக்க வைத்த திரைப்படம் என்றால் அது 'அர்ஜுன் ரெட்டி' படம் தான். இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, ஹிந்தி,  தமிழ் என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. மற்ற மொழிகளில் இப்படம் வெற்றிபெற்ற போதிலும் தமிழில் படுதோல்வியை சந்தித்தது.
 

47

இதை தொடர்ந்து இவர் நடித்த மகாநடி, கீதா கோவிந்தம்,     டாக்சி வாலா, குஷி, போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே நேரம் லிகர் போன்ற சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. கடைசியாக விஜய் தேவரகொண்டா, நடிகர் மிருணாள் தாகூருடன் நடித்திருந்த திரைப்படம் 'ஃபேமிலி ஸ்டார்'. இதை தொடர்ந்து இன்னும் பெயரிடாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். 

Raai Laxmi: 35-ஆவது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடிய ராய் லட்சுமி! ரசிகர்களுக்கு வைத்த கவர்ச்சி ட்ரீட் இதோ!
 

57

மிக குறுகிய காலத்திலேயே பெண் ரசிகர்களின் கனவு கண்ணனாக மாறிய விஜய் தேவரகொண்டா... நடிகை ராஷ்மிகாவை காதலித்து வருவதாக ஒரு சர்ச்சை கடந்த சில வருடங்களாகவே கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. ஆனால் இருவருமே தங்களின் உறவை ரகசியமாகவே வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

67

இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று தன்னுடைய 35-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

Shaalin Zoya: பிச்சைக்கார நாயே.. பொறுக்கி என கோமாளியை அசிங்கமாக திட்டி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி!
 

77

விஜய் தேவரகொண்டாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் பிரமாண்ட வீடு ஒன்று இல்லது. இது மட்டும் இன்றி இன்னும் சில இடங்களை வாங்கி வைத்துள்ளதாக கூறப்டுகிறது. அதே போல் 4க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை இவர் வைத்துள்ளார். மிகவும் எளிமையாக இருப்பதையே விரும்பும் இவரின் சொத்து மதிப்பு சுமார் 66 கோடி முதல் 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.    
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved