நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
திரை பயணத்தின் தொடக்க காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் தனது வெகுலியான நடிப்பை பெளிப்படுத்தியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்ப கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிலையில் தற்போது விடுதலை, கருடன் என வெற்றி படங்களின் நாயகனாக வலம் வருகிறார்.
இந்நிலையில் இவரது பிறந்த நாள் விழா வருகின்ற 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சேலத்தில் சூரி நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் ரத்த தானம் செய்தனர்.