Indian 2 Movie : "தாத்தா வராரு.. கதறவிட போறாரு".. கமலின் இந்தியன் 2 - வெளியானது "கதறல்ஸ்" லிரிகள் வீடியோ!

Kadharalz Lyrical Video : இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ம் தேதி உலக அளவில் வெளியாகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு இந்த படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

First Published Jun 7, 2024, 7:29 PM IST | Last Updated Jun 7, 2024, 7:51 PM IST

கமல் மற்றும் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகத் துவங்கியது. சரியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக கடந்து சில ஆண்டுகளாக இந்த படம் உருவாகுவதில் பல சிக்கல்கள் எழுந்து வந்தது. 

இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. அதேபோல இந்தியன் திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 

பல்வேறு திரைப்படங்களும் இதில் கலந்துகொண்ட நிலையில் இன்று ஜூன் மாதம் ஏழாம் தேதி இந்த திரைப்படத்தில் உள்ள "காதலர்ஸ்" என்கின்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. "தாத்தா வராரு கதரவிட போறாரு" என்று அனிருத்தின் இசையில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Video Top Stories