கத்தி.. துப்பாக்கி.. புல்லட்டு எல்லாம் பறக்குது! மாஸாக வெளியாகி மெர்சல் செய்த 'ஹுக்கும்' லிரிகள் பாடல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தில் இருந்து 'ஹுக்கும்' செகண்ட் சிங்கிள் லிரிகள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published Jul 17, 2023, 6:20 PM IST | Last Updated Jul 17, 2023, 6:20 PM IST

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ஹுக்கும் லிரிகள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பட குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த பாடலில் லிரிக்கல் வீடியோ படுமாஸாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர், தலைவரை மிகவும் ஸ்டைலிஷ் ஆகவும்.... ஆக்ரோஷமான அதிரடி கெட்டப்பில் 'ஜெயிலர்' படத்தின் மூலம் பார்க்க முடிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த பாடலில் வரும் ஒவ்வொரு காட்சிகளும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஏற்கனவே 'ஜெயிலர்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலுக்கு, தமன்னா போட்ட ஆட்டம் தற்போது வரை திரையுலகை பிரபலங்களையும்... ரசிகர்களையும் ஆட வைத்து வரும் நிலையில், அதையே மிஞ்சும் அளவுக்கு தலைவர் இந்த பாடலில் கத்தி, துப்பாக்கி, புல்லட்டுகளை பறக்க விட்டு  மாஸ் காட்டியுள்ளார்.
 

Video Top Stories