புரோமோவுக்கே புரோமோவா... வேறமாரி சம்பவத்துக்கு ரெடியான அனிருத் - நெல்சன் காம்போ - ஜெயிலர் அப்டேட் இதோ

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Video

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அனிருத் -நெல்சன் கூட்டணி என்றாலே அவர்கள் வெளியிடும் பாடல்களைவிட அப்பாடலுக்கான புரோமோவுக்கு அதிக மவுசு இருக்கும். டாக்டர், பீஸ்ட் படங்களுக்கு சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து இவர்கள் செய்த அட்ராசிட்டியை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்துக்காகவும் ஒரு புரோமோ ரெடியாகி உள்ளதாம். அந்த புரோமோ நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டு அதற்கான புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளனர். 

Related Video