watch : அனிருத் - ஹிப்ஹாப் ஆதி கூட்டணியில் உருவான 'தண்டர்காரன்' பாடல் - வைரலாகும் வீரன் பர்ஸ்ட் சிங்கிள்

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள வீரன் படத்தில் இடம்பெற்றுள்ள தண்டர்காரன் என்கிற பாடல் யூடியூப்பில் ரிலீஸ் ஆகி வைரலாகி வருகிறது.

Share this Video

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வீரன். மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.ஷரவன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைத்து உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

இந்நிலையில், வீரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தண்டர்காரன் என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை அனிருத்தும் ஹிப் ஹாப் ஆதியும் இணைந்து பாடியுள்ளனர். இதன் புரோமோ வீடியோ வெளியாகி யூடியூப்பில் வைரலாகி வருகிறது. இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார்.

Related Video