பிரபல திரைப்பட இயக்குனர் ஹரியின் தந்தை உடல் நலக்குறைவால் மறைவு.. பிரபலங்கள் அஞ்சலி..

திரைப்பட பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் சொந்த ஊரான கச்சனாவிளையில் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Share this Video

தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன்(88). உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் சொந்த ஊரான ஊரான தூத்துகுடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கச்சனாவிளையில் நடைபெற்றது. இந்த நல்லடக்கத்தில் இயக்குனர் ஹரியின் மாமனாரும், பிரபல நடிகருமான விஜயகுமார், நடிகர் அருண்விஜய், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Related Video