Devaralan Aattam : பொன்னியின் செல்வனில் இருந்து வெளியானது தேவராளன் ஆட்டம்

கார்த்தி உளவு பார்க்கச் செல்லும்போது பெரிய பழுவேட்டயராக இருக்கும் சரத்குமார் முன்னிலையில் இந்த பாடல் பாடப்படும்.

Share this Video

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கி இருந்த பொன்னியின் செல்வன். ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்துவிட்டது. சோழ வம்ச வரலாறான இந்த நாவலை படமாக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்த மணிரத்தினம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இதனை திரையிட்டு விட்டார். உலகம் முழுவதும் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான இந்த படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்பட்டது.

லைக்கா, மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் மேற்கொண்டு இருந்தார். முன்னதாக வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. பின்னர் பிரமாண்டமான முறையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான இந்தப் படத்தை தென்னிந்திய சினிமா உலகமே கொண்டாடியது. இந்த படத்தில் இருந்து தேவராளன் ஆட்டம் என்னும் வீடியோ சாங் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...கண்ணம்மாவின் கணிப்பு சரியா போச்சே..லாவகமாக எஸ்கேப்பான வெண்பா!

கார்த்தி உளவு பார்க்கச் செல்லும்போது பெரிய பழுவேட்டயராக இருக்கும் சரத்குமார் முன்னிலையில் இந்த பாடல் பாடப்படும். ஏ ஆர் ரஹ்மான் இசை மேற்கொள்ள பாடலை யோகி சேகர் என்பவர் பாடியிருந்தார். இதற்கான வரிகளை இளங்கோ கிருஷ்ணன் இயற்றி இருந்தார். பாடல் வெளியாகி சிறிது நேரத்திலேயே 63,210 வியூஸ்களை பெற்றுள்ளது.

Related Video