நான் சொல்வதை கேளுங்கள் என்கிட்ட ஆதாரம் எதுவும் இல்லை ஆனால் என் உள் மனசு அதைதான் சொல்லுது என கதவை உடைக்க சொல்ல அகிலனும் ரோஹித்தும் சேர்ந்து கதவை உடைக்கின்றனர்

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மாவில் தற்போது வெண்பாவின் திருமண படலம் நடைபெற்று வருகிறது. வெண்பாவிற்கு என தனி ரசிகர் பட்டாலமே உண்டு அந்த அளவிற்கு துல்லியமான வில்லத்தனத்தை காட்டி வருகிறார். வெட்ப நேற்றைய எபிசோடில் வெண்பாவின் திருமணத்திற்காக வருகை தரும் அனைவரையும் அவரது தாயார் ஷர்மிளா வரவேற்று அமர வைக்கிறார். பின் கண்ணம்மாவை பார்க்கும் வெண்பா மற்றும் சாந்தி அவரை வெறுப்பேற்ற என்ன வெண்பா போட்டு இருக்கும் அனைத்து திட்டங்களையும் கண்ணம்மா புட்டு புட்டு வைக்கிறார். இதையடுத்து அதிர்ச்சி அடைகிறார் வெண்பா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்றைய எபிசோடில் வந்த அமர்ந்தவுடன் கண்ணம்மா பாரதியை தேடுகிறார் சௌந்தர்யா யாரை தேடுற எனக்கேட்க உங்க பிள்ளையை தான் என சொல்ல, அவன் ஏதோ கான்பரன்ஸ் மீட்டிங் இருக்குன்னு வரல எனக் கூறுகிறார் சௌந்தர்யா. இதனால் கண்ணம்மாவிற்கு சந்தேகம் அதிகமாகிறது. மேலும் முகூர்த்த புடவை வாங்குவதற்காக மேடைக்கு வரும் வெண்பாவின் நடவடிக்கையும் சந்தேகத்தை கூட்டுகிறது.

மேலும் செய்திகளுக்கு... பொன்னியின் செல்வனில் இருந்து தேவராள ஆட்டம் ஸ்நீக் பீக்; பாடல் எப்போ தெரியுமா?

பின்னர் சவுந்தர்யாவிடம் வெண்பா திரும்பி வரமாட்டா பாருங்க, இந்த கல்யாணம் நடக்காது என கூறுகிறார். ஆனால் சௌந்தர்யா அதெல்லாம் வருவா, கல்யாணம் நடக்கும் என ஒரு நம்பிக்கையில் தெரிவிக்கிறார். கண்ணம்மா சொன்னபடியே புடவையை மாற்ற போன வெண்பா நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் அனைவருக்கும் சந்தேகம் வருகிறது .பின்னர் வெண்பா உள்ள அறையின் கதவை உடைக்க கண்ணம்மா கூறுகிறார். ஆனால் ஷர்மிளாவோ அவ புடவை மாற்ற அதிக நேரம் எடுத்துக் கொள்வாள் என கூற. 

இல்லை நான் சொல்வதை கேளுங்கள் என்கிட்ட ஆதாரம் எதுவும் இல்லை ஆனால் என் உள் மனசு அதைதான் சொல்லுது என கதவை உடைக்க சொல்ல அகிலனும் ரோஹித்தும் சேர்ந்து கதவை உடைக்கின்றனர். உள்ளே பார்த்தால் வெண்பா ஆளில்லாமல் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.