அனிருத் குரலில்.. பாலாஜி முருகதாஸ் - காவியா அறிவுமணி கலர் ஃபுல் காம்பினேஷனில் "Aao Killelle" ஆல்பம் பாடல்!

அனிருத் இசையில் பாலாஜி முருகதாஸ் மற்றும் காவியா அறிவு மணியின் அட்டகாசமான ஆட்டத்தில் தற்போது "Aao Killelle" எனும் ஆல்பம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
 

First Published Mar 12, 2024, 7:29 PM IST | Last Updated Mar 12, 2024, 7:29 PM IST

அனிருத் ரவிச்சந்தரின் தனித்துவமான மனதை மயக்கும் குரலில், மூத்த பாடகரும் இசையமைப்பாளருமான சுரேஷ் பீட்டர்ஸ் தனது ரிதம் ராப் திறமையை வெளிப்படுத்தும் "Aao Killelle" பாடல், கோடை காலத்திற்கு ரசிகர்களின் கண்களுக்கு கூடுதல் குளிர்ச்சியோடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

பிரவின் மணியின் உச்சாகம் நிறைந்த இசை, இப்பாடலை வேறு லெவலுக்கு கொண்டு செல்கிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர் காவியா அறிவுமணி மற்றும் பாலாஜி முருகதாஸின் கவர்ச்சியான ஆட்டம், வேற லெவல். தற்போது வெளியாகியுள்ள பாடல் இதோ .

Video Top Stories