கேரவனில் இருந்து எட்டிப் பார்த்து கை அசைத்த அஜித்; உற்சாகத்தில் துள்ளிக் குதித்த ரசிகர்கள் !

துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்  ரசிகர்களை அஜித் சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....

First Published Oct 22, 2022, 7:39 AM IST | Last Updated Oct 22, 2022, 11:28 AM IST

வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித், ஹச் வினோத், போனிக் கபூருடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வங்கி கொள்ளை தொடர்பான கதைக்களம் தற்போது உருவாகி வருகிறது. முந்தைய இரண்டு படங்களும் சரியான வரவேற்பை பெறாததால் துணிவு  படம் மீது ரசிகர்களுக்கு அதீத நம்பிக்கையில்  உள்ளனர்.. 

இந்த படத்தில் அஜித் இரு வேறு வேடங்களில் வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத், சென்னை, தாய்லாந்து என இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மலையாள நாயகி மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா உறுதி..! என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்!

முன்னதாக சென்னை போன்ற சேட் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டது குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. பின்னர் விடுமுறையில் வெளிநாடு சுற்றுலா சென்ற அஜித்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின. இந்நிலையில் துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்  ரசிகர்களை அஜித் சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது.

Read More...