நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா உறுதி..! என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்!

நடிகர் ஜெயம் ரவி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளம் மூலம் கூறியுள்ளார்.
 

Shocking ponniyin selvan Actor Jayamravi Affected Corona positive

கடந்த ஆண்டு அளவுக்கு, இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும்... கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகவே உள்ளது. எனவே எங்கு சென்றாலும், மாஸ்க் அணிந்து செல்லவேண்டும் என்பதை, மருத்துவர்களும், சுகாதார துறையை சேர்ந்தவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், கொரோனா தாக்கம் குறைந்ததால் மாஸ்க் போடுவதையும் மக்கள் குறைத்து விட்டனர்.

Shocking ponniyin selvan Actor Jayamravi Affected Corona positive

மேலும் செய்திகள்: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இந்த பிரபலமா? வெளியான ஷாக்கிங் தகவல்..!

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாயகன்... நடிகர் ஜெயம் ரவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்று மாலை கொரோனா பரிசோதனை செய்த போது கொரோனா பாசிட்டிவ் என வந்ததாகவும்,  எனவே தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, தன்னை தனிமை படுத்திகொண்டு, உரிய சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தன்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shocking ponniyin selvan Actor Jayamravi Affected Corona positive

மேலும் செய்திகள்: உறுதி..! 23 வயது பெண்ணுடன் 56 வயதில் திருமணமா? நடிகர் பப்லு பரபரப்பு விளக்கம்..!

கொரோனா தொற்று, இந்தியாவிற்குள் வந்த போது அதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் தாக்கம் குறைந்திருந்தாலும், இன்னும் முழுமையாக இந்தியாவை விட்டு சென்றுவிட வில்லை. மேலும் உருமாறிய கொரோனா போன்றவை தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. எனவே மக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து, எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்வதை கடைப்பித்தாலும், சுகாதாரத்துடன் இருந்தால் மட்டுமே, கொரோனா அதிகமாவதை தடுக்க முடியும் என தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios