சேலத்தில் கலை நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை நிக்கி கல்ராணி

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு கலைஞர்களுடன் இணைந்து மேடையில் நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

First Published Apr 15, 2023, 11:09 AM IST | Last Updated Apr 15, 2023, 11:21 AM IST

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டி ஸ்ரீ பூவாயம்மாள் பண்டிகையை முன்னிட்டு நட்சத்திர கலை விழா பெற்றது. திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். நடிகை வருவதைக் கண்டதும் ஏராளமான இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து சின்ன மச்சான் பாடலுக்கு கலைஞர்களுடன் மேடையில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். 

நடனத்தைக் கண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விசில் பறக்க ஆரவாரம் செய்து கொண்டாடினர். தொடர்ந்து நிக்கி கல்ராணி உடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் காவல்துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தினர். மேலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒருமுறை பாடலுக்கு நடனமாடி அந்த பகுதியில் இருந்து கிளம்பி சென்றார்.

Video Top Stories