Asianet News TamilAsianet News Tamil

Bigg Boss Tamil Season 6 Promo : புறக்கணிப்பால் கடுப்பான குயின்சி...விக்ரமனுடன் மோதல் ஆரம்பம்

இரண்டாவது முறையாக அமுதவாணனிடம் சென்று குயின்சி வேண்டாம் என நீங்கள் சொன்னது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதைப்பற்றி இனி பேச வேண்டாம் என கடுமையாக கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

First Published Nov 3, 2022, 4:38 PM IST | Last Updated Nov 3, 2022, 4:38 PM IST

விஜய் டிவியில் அதிக ரேட்டிங் பெற்று வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசனில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 21 போட்டியாளர்களுடன் துவங்கியது இதில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே மிச்சம் உள்ளனர்.

இந்த வாரம் அந்த டிவி இந்த டிவி என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் மூன்று அணியாக பிரிந்து போட்டியாளர்கள் பர்ஃபார்ம் செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக 25 வது நாளான இன்றும் இந்த டாஸ்க் நடைபெறுகிறது. அதில் பிபி டேலண்ட் ஷோ என்ற தலைப்பில் டாஸ் வைக்கப்படுகிறது. இந்த தலைப்பின் கீழ் தங்களது திறமைகளை போட்டியாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். செய்தி வாசிப்பது, நடனம் ஆடுவது, நாடகம் நடிப்பது என தங்களது திறமைகளை கொட்டி தீர்த்து வருகின்றனர் போட்டியாளர்கள். இது குறித்தான இரண்டு ப்ரோமோக்கள் முன்னதாக வெளியாகி வைரல் ஆகியது.

மேலும் செய்திகளுக்கு...GP MUTHU with sunny leone : ஓ மை கோஸ்ட் விழாவில் மாஸ் காட்டும் பிக்பாஸ் பிரபலங்கள்

முதலில் விக்ரமன் நாடகம் குறித்த பிரமோ வெளியானது. இரண்டாவதாக விக்ரமன் குறித்து பேசி இருந்த பிரமோ வெளியானது. தற்போது குயின்சி - விக்ரம் இடையே வரும் சண்டை குறித்தான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் எனக்கு பதிலாக ஜனனியை தேர்ந்தெடுத்தது கூட பரவாயில்லை. அவருக்கு என்னை விட நன்றாக நியூஸ் வாசிக்க தெரியும். ஆனால் இரண்டாவது முறையாக அமுதவாணனிடம் சென்று குயின்சி வேண்டாம் என நீங்கள் சொன்னது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதைப்பற்றி இனி பேச வேண்டாம் என கடுமையாக கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Video Top Stories