Asianet News TamilAsianet News Tamil

கோளாறாக காதல் ஜோடியை பிரித்த கமல்! வெளியேறிய அசல்... கதறி அழுத நிவாஷினி - வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண்களிடம் தொடர்ந்து சில்மிஷ வேலைகளை செய்துவந்த அசல் கோளாரு தற்போது எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளார்.

First Published Oct 30, 2022, 4:09 PM IST | Last Updated Oct 30, 2022, 4:09 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர் அசல் கோளாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். முதல் வாரத்தில் அமைதியாக இருந்த இவர், பின்னர் படிப்படியாக தனது சில்மிஷ வேலைகளை காட்டத்தொடங்கினார்.

முதலில் குவின்ஸியிடம் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தினம் ஒரு சில்மிஷம் என சொல்லும் அளவும், தினசரி ஒவ்வொரு பெண்களிடம் தனது சில்மிஷ வேலைகளை செய்து வந்தார். இதைப்பற்றி கமலும் கடந்த வாரம் எந்தவித கேள்வியும் கேட்காமல் இருந்தார்.

இதையும் படியுங்கள்.. விஜயின் பெற்றோர்கள் ஆசியுடன் நடைபெற்ற ஹரிஷ் கல்யாணின் திருமண வரவேற்பு

இதனால் கடுப்பான ரசிகர்கள் இந்த வாரம் அசலை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற முனைப்பில் அவருக்கு ஓட்டே போடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களின் ஆசைப்படி இந்த வாரம் அசல் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் கூட டேஞ்சர் ஜோனில் இடம்பெற்றுள்ள மூவரில் ஒருவராக அமர்ந்திருந்த அசல், தான் எதற்காக இங்கு உட்கார்ந்து இருக்கிறேன் என்று புரியவில்லை என பேசியதை கேட்டு ஆடியன்ஸ் கைதட்டி சிரித்தனர். பின்னர் நிவாஷினியிடம் மகேஸ்வரி, அசீம், அசல் மூவரில் யார் காப்பாற்றப்படுவார் என கமல் கேட்க, அதற்கு அவர் அசல் இருக்கணும், இருப்பாரு என சொன்னதும், கமல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லி அசல் பெயரை அறிவித்தார். இதைக்கேட்டு நிவாஷினி கதறி அழுதுள்ளார். இதன்மூலம் பிக்பாஸ் வீட்டில் காதல் புறாக்களாக வலம் வந்து கொண்டிருந்த அசல் - நிவாஷினியை கோளாறாக பிரித்து விட்டுள்ளார் கமல்.

இதையும் படியுங்கள்.. அட்ராசக்க... மீண்டும் ஆரம்பமாகும் வாத்தி ரெய்டு - முதன்முறையாக ஜப்பானில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ள விஜய் படம்