Asianet News TamilAsianet News Tamil

ஜிபி முத்து தான் சிங்கம்... அசீம் பாம்பு மாதிரி! கமல் கொடுத்த டாஸ்க்கால் ஷாக்கான போட்டியாளர்கள்- வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸுக்கு சர்ப்ரைஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.

First Published Oct 23, 2022, 1:32 PM IST | Last Updated Oct 23, 2022, 1:32 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடான இன்று எலிமினேஷனும் நடக்க உள்ளது. இதில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற சாந்தி எலிமினேட் செய்யப்பட உள்ளார். இது ஒரு புறம் இருக்க நேற்று ரெட் கார்டு டாஸ்க் கொடுத்ததை போல் இன்றும் ஹவுஸ்மேட்ஸுக்கு ஒரு சர்ப்ரைஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள புரோமோவில், பாம்பு போல் விஷத் தன்மை கொண்ட போட்டியாளர் என மைனா நந்தினி, தனலட்சுமியை தேர்வு செய்கிறார். அதேபோல் தனலட்சுமி அசீமை தேர்வு செய்து, அவர் விஷத்தை கக்குவது போல் உள்ளதாக தெரிவித்தார். பின்னர் நரி போல் குறுக்குபுத்தி உள்ளவர் என மகேஸ்வரியை தேர்வு செய்தார் மைனா. இதையடுத்து சிங்கம் போல் வீட்டை கட்டுப்படுத்துபவர் என ஜிபி முத்துவை மைனா தேர்வு செய்ததும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதையும் படியுங்கள்... பாதியில் விலகிய ஜிபி முத்து... அவருக்கு பதில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

Video Top Stories