Asianet News TamilAsianet News Tamil

நேத்து ஷெரினா... இன்னைக்கு ஆயிஷாவா..! கேப் விடாமல் வச்சு செய்யும் கமல்ஹாசன் - மாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஷெரினாவை வறுத்தெடுத்த கமல், இன்று ஆயிஷாவிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கும் புரோமோ வெளியாகி உள்ளது.

First Published Oct 30, 2022, 9:20 AM IST | Last Updated Oct 30, 2022, 9:20 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க நானும் பொம்மை... நீயும் பொம்மை டாஸ்கில் தனலட்சுமி மீது அசீம், ஷெரினா ஆகியோர் சொன்ன அடுக்கடுக்கான புகார்களுக்கு நேற்று குறும்படம் போட்டு பதிலடி கொடுத்தார் கமல்ஹாசன். குறிப்பாக ஷெரினா ஓவர் ஆக்டிங் செய்ததையும் வெளிச்சம் போட்டு காட்டினார்.

அதேபோல் இன்று கமலின் பார்வை ஆயிஷா பக்கம் திரும்பி உள்ளது போல் தெரிகிறது. நானும் பொம்மை... நீயும் பொம்மை டாஸ்கில் ஆயிஷா வேண்டுமென்றே ரச்சிதாவின் பொம்மையை வெளியேற்றி விட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நடித்தார். அதனை சுட்டிக்காட்டி கேட்ட கமல்ஹாசனிடம் தான் அசீம் சொன்னதால் தான் அப்படி சொய்ததாக சொல்கிறார் ஆயிஷா.

இதன்மூலம் நேற்று ஷெரினாவை வறுத்தெடுத்தது போல் இன்று ஆயிஷாவை கமல்ஹாசன் வறுத்தெடுத்துள்ளார் போல தெரிகிறது. இதனால் தற்போது வெளியாகி உள்ள புரோமோ சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... துணிவு மட்டுமில்ல வாரிசு படத்தையும் உதயநிதி தான் வெளியிட போகிறாராம்... இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு..!

Video Top Stories