பிக்பாஸில் நடந்த டுவிஸ்ட்! சண்டை போட்டவங்கள விட்டுட்டு... சைலன்டா இருந்தவங்கள தூக்கி ஜெயில்ல போட்ட ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே சண்டை ஏற்பட்ட நிலையில், தற்போது இருவரை அங்குள்ள ஜெயிலில் கைதிகள் போல் அடைத்து வைத்துள்ளனர்.

Share this Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக ஜெயில் இடம்பெற்று இருந்தது. இதற்கு முந்தைய சீசன்களில் வீட்டின் ஒரு பகுதியில் ஜெயில் இடம்பெற்று இருக்கும். யார் சரியாக விளையாடாத போட்டியாளர்கள் என சக ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் ஜெயில் அடைக்கப்படுவார்கள்.

ஆனால் இந்த முறை ஜெயில் என தனியாக ஒரு இடம் இல்லாமல் கிளிக் கூண்டு போல இருக்கும் ஒன்றை சிறையாக பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த சீசனில் பயன்படுத்தப்படாமல் இருந்த இந்த கூண்டை தற்போது முதன்முறையாக பயன்படுத்தி உள்ளனர். அதன்படி ஜனனியும், ராமும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள புரோமோ வெளியாகி உள்ளது.

யாரோ சண்டை போட்டதற்கு நம்மை ஏன் தேர்ந்தெடுத்து சிறையில் அடைக்கிறார்கள் என இருவரும் ஆதங்கத்தோடு பேசும் காட்சிகள் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளது. அவர்கள் இருவரும் எதற்காக வெளியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதை இன்றைய எபிசோடில் தான் தெரியவரும்.

இதையும் படியுங்கள்... MLA-வோட மருமகன் நான்... அதுனால தான் விக்ரமன் என்கிட்ட பேசமாட்றான் - அசீமின் பேச்சால் வெடித்த சர்ச்சை

Related Video