Biggboss Tamil: தனலட்சுமி சொன்னதை கேட்டு கண்ணீர் விட்ட ஜிபி முத்து.! நீ அழுவாத தலைவா.. மனதை தேற்றிய ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டில் தன்னை பற்றி தனலட்சுமி கூறும் போது, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அழும் ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Oct 18, 2022, 6:38 PM IST | Last Updated Oct 18, 2022, 6:40 PM IST

பிக்பாஸ் சீசன் 1 க்கு பிறகு, சீசன் 6 தான் சுவாரஸ்யமாக இருக்கிறது என பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இன்றைய தினம் பல சிறப்பான டாஸ்குகள் மூலம் நிகழ்ச்சியை செம்ம சுவாரஸ்யமாகியுள்ளார் பிக்பாஸ். அந்த வகையில் நேற்றைய தினமே டான்ஸ் குறித்த டாஸ்க் பற்றி பிக்பாஸ் கூறியிருந்த நிலையில் இன்று அந்த டாஸ்குகள் அரங்கேறுகிறது.

இதை தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கும் தங்களை பற்றி போட்டியாளர்கள் கூற வேண்டும் என்கிற டாஸ்க் ஒன்று வைக்கப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே வெளியான புரோமோவில், ஜனனி, அசீம், ஆகியோர் பேசி கொண்டிருந்த போது ஒரு நிமிடம் முடிந்து விட்டதாக பிக்பாஸ் தெரிவிக்கிறார். இவர்களை தொடர்ந்து தனலட்சுமி இப்னு பேசுகிறார்.

டிக் டாக்கில் ரீலிஸ் செய்து பிரபலமான இவருக்கு இவருடைய அம்மா தான் கேமரா மேனாக இருப்பாராம். கேமராவை பிடிக்கவில்லை என்றால் அன்றைய தினம் வீட்டில் பிரச்சனை செய்வேன். இப்போது அம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன் என எமோஷ்னலாக பேச, பிக்பாஸ் வீடே கண்ணீர் விடுகிறது. ஜிபி முத்து,  அவரது ஆர்மியை சேர்த்தவர்கள், சண்டை போட்ட பெண்ணுக்காக கண்ணீர் விடுவது மிகப்பெரிய மனசு என கொண்டாடி வருகிறார்கள்.

Video Top Stories