சவால்விட்டு... தர லோக்கலாக இறங்கி குத்தாட்டம் போட்ட ஹவுஸ்மேட்ஸ் - ஜாலி மூடுக்கு மாறிய பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒருவரோடு ஒருவர் சவால்விட்டு நடனபோட்டி ஒன்றையும் நடத்தி உள்ளனர்.

First Published Oct 18, 2022, 3:45 PM IST | Last Updated Oct 18, 2022, 3:45 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸுக்கு அடிக்கடி டாஸ்க்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், டான்ஸ் டாஸ்க் ஒன்றை நேற்று வழங்கி இருந்தார் பிக்பாஸ். அதில் போட்டியாளர்கள் தாங்கள் சேர்ந்து நடனமாட விரும்பும் ஒரு நபரை தேர்வு செய்யச் சொன்ன பிக்பாஸ் பின்னர் அதில் ஒரு டுவிஸ்ட் வைத்து ஒருவருக்கொருவர் சவால்விட்டு நடனமாட வேண்டும் என அறிவித்தார்.

இதையடுத்து அனைவரும் ஆளுக்கு ஒருவரை தேர்ந்தெடுத்து மொத்தம் 10 ஜோடிகள் இருந்தன. இதில் மைனா நந்தினிக்கு மட்டும் ஜோடி இல்லாததால் அவர் மட்டும் தனியாக ஆட வேண்டும் என கூறினார் பிக்பாஸ். அதுமட்டுமின்றி அவருக்கு இது பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம், என்பதனால் 200 லக்ஜுரி பட்ஜெட் மதிப்பெண்ணும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் போட்டியாளர்கள் தங்களுக்கு சவால் விட்டவர்களோடு இணைந்து தர லோக்கலாக குத்தாட்டம் போடும் காட்சி இடம்பெற்று உள்ளன. அசல், ராம் உடனும், ஜிபி முத்து ஏடிகே உடனும், தனலட்சுமி, மணிகண்டன் உடனும் நடனமாடும் காட்சிகள் இந்த புரோமோவில் இடம்பெற்று இருக்கின்றன.

இதையும் படியுங்கள்... நேத்து குவின்ஸி.. இன்னைக்கு மகேஸ்வரி - பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறும் அசல்! ரெட் கார்டு கொடுப்பாரா பிக்பாஸ்?