Asianet News TamilAsianet News Tamil

மகேஸ்வரியை டார்கெட் செய்த அசீம்... ஒரு ஆள் விடாமல் வச்சு செய்யும் விக்ரமன் - பிக்பாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் நேரம் என்கிற டாஸ்க் இன்றும் நடைபெற்றுள்ளது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

First Published Oct 19, 2022, 9:48 AM IST | Last Updated Oct 19, 2022, 9:48 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கதை சொல்லும் நேரம் என்கிற டாஸ்க் நடத்தப்படுகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களது கதையை சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லும் கதை சக போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒரு நிமிடத்திற்குள் பஸ்ஸர் அமுக்கு வேண்டும். அப்படி ஒரு நிமிடத்தை தாண்டி கதை சொல்லுபவர் அடுத்தவார நாமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும்.

இந்த டாஸ்க்கில் நேற்று தனலட்சுமி மற்றும் நிவாஷினி ஆகியோர் மட்டும் 1 நிமிடத்தை தாண்டி கதை சொன்னார்கள். ஜனனி, அசீம், ஏடிகே ஆகியோருக்கு ஒரு நிமிடம் முடியும் முன்பே பஸ்ஸர் அமுக்கி வெளியே அனுப்பி விட்டனர். குறிப்பாக நேற்று அசீம் தனது விவாகரத்து குறித்து பேச தொடங்கியதும் மகேஸ்வரி, ரச்சிதா ஆகியோர் வேகமாக வந்து பஸ்ஸர் அமுக்கி அவரை வெளியேற்றினர். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று கணவரை பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்று மைனா நந்தினி, மகேஸ்வரி, கதிரவன் ஆகியோர் எமோஷனலாக பேசத் தொடங்கியதும் அவர்களை பஸ்ஸர் அமுக்கி வெளியேற்றி உள்ளனர். குறிப்பாக மகேஸ்வரிக்கு அசீம் முதல் ஆளாக வந்து பஸ்ஸர் அமுக்குகிறார். அதேபோல் விக்ரமனும் ஒரு ஆள் விடாமல் பஸ்ஸர் அமுக்கி விடுகிறார். இதுவரை அதிகமுறை பஸ்ஸர் அமுக்கியது விக்ரமன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... குழந்தை பெத்துக்கனும்னு ஆசையா இருக்கு... ஆனா முடியாது - என்ன தமன்னா இப்படி சொல்லிட்டாங்க..!

Video Top Stories