வெள்ள சட்ட போட்டா அரசியல்வாதியா... டேய் போடா - தரக்குறைவாக பேசிய அசீம்... அடிக்க பாய்ந்த விக்ரமன் - வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேங்கிங் டாஸ்கின் போது விக்ரமனும், அசீமும் சண்டையிட்டுக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.

Share this Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் அடிக்கடி டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கதை சொல்லும் நேரம் டாஸ்கில் வென்றவர்களை தவிர எஞ்சியுள்ள 13 பேரும் பங்கேற்றுள்ளனர். அதில் ஒவ்வொருவரும் தான் இந்த ரேங்கிற்கு தகுதியானவர் எனக் கூறி ஒவ்வொரு இடத்தில் நிற்க வேண்டும்.

அந்த டாஸ்கில் அசீமுக்கு 13-வது இடம் கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், ஆயிஷா, விக்ரமன் ஆகியோரெல்லாம் தகுதியே இல்லாதவர்கள் என பேசி இருந்தார். விக்ரமன் எப்போது தூங்கிக் கொண்டு இருப்பதால் அவர் ஆறாவது இடத்தில் நிற்க தகுதி இல்லாதவர் என கூறினார் அசீம். உடனே நீ என்ன வேலை பண்ணீருக்க என விக்ரமன் கேட்க, யோவ் என குரலை உயர்த்தினார் அசீம்.

இதனால் கடுப்பான விக்ரமன் யோவ்னுலாம் பேசாத என சொல்ல, அதற்கு அசீம், அப்படி தான் டா பேசுவேன், வேலைய பாருடா போடா என தரக்குறைவாக பேசினார். இதனால் டென்ஷன் ஆன விக்ரமன், நீ வாட்ல இளவரசன் மாதிரி வர்ற எல்லாரையும் வாடா போடானு சொல்ற என தட்டிக் கேட்க. பதிலுக்கு அசீம், வெள்ளை சட்டை போட்டா நீ என்னடா அரசியல்வாதினு சொல்லிட்டு இருக்க என சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் அங்கிருந்த சக ஹவுஸ்மேட்ஸ் அவர்களை சமாதானப்படுத்தும் காட்சிகள் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன. இதன்மூலம் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய சண்டை காத்திருக்கிறது என்பது தெரிகிறது.

இதையும் படியுங்கள்... என்ன தம்பி உனக்கு ஆம்பளைங்களே புடிக்கமாட்டுது..! பெண்கள் பின்னாடியே சுற்றும் அசலை நோஸ் கட் பண்ணிய ஜிபி முத்து

Related Video