Asianet News TamilAsianet News Tamil

ஏன் வாடி... போடினு சொல்ற - திமிராக பேசிய அசீம்... திருப்பி அடித்த ஆயிஷா - அனல்பறக்கும் பிக்பாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றபோது ஆயிஷாவிற்கும் அசீமுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் சக போட்டியாளர்கள் பதறிபோயினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஆரம்பித்து 12 நாட்களே ஆகும் நிலையில், அதில் நடக்கும் சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று தனலட்சுமிக்கும், அசல் கோலாருக்கும் இடையே நடைபெற்ற சண்டை சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆன நிலையில், இன்று ஆயிஷாவும், அசீமும் சண்டையிட்டுள்ளனர்.

அதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் போட்டியாளர்கள் ஒன்று முதல் 13 வரை உள்ள ரேங்கிங் அடிப்படையில் நிற்கின்றனர். அதில் 13-வது இடம் பிடித்த அசீம், ஒன்றாம் இடத்தில் உள்ள மகேஸ்வரி, ஆறாவது இடத்தில் உள்ள விக்ரமன், 9-வது இடத்தில் உள்ள ஆயிஷா ஆகியோர் தகுதி இல்லாதவர்கள் என கூறுகிறார்.

இதைக்கேட்டு கடுப்பாகும் ஆயிஷா, என்னைப்பார்த்து எப்படி நீங்க தகுதி இல்லாதவள்னு சொல்லலாம் என கேட்க, இதற்கு பதிலளித்த அசீம், நீ தூங்குறத தவிர என்ன பண்ற என சொன்னதும் கடுப்பாகி கத்துகிறார் ஆயிஷா. இதையடுத்து டென்ஷனான அசீம் அவரை வாடி.. போடி என மரியாதை குறைவாக பேச தொடங்கியதும் அவருக்கு பதிலடி கொடுக்கிறார். இதைப்பர்த்த மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஷாக் ஆகிப் போய் பார்க்கின்றனர். இந்த புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... முதல் முறையாக தீபாவளி ரிலீஸ்... மனைவியோடு தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்

Video Top Stories