Bigg Boss Tamil Season 6 : இந்த வார நாமினேஷனுக்கு தேர்வான 5 போட்டியார்கள் யார் யார் தெரியுமா?

ந்த வார நாமினேஷனுக்காக ஆயிஷா, அசீம், செரீனா, கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்ஷன் செய்யப்பட்டுள்ளனர்.

Share this Video

விஜய் டிவிகள் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சில நாட்களிலேயே சூடு பிடித்து விட்டது. செப்டம்பர் 9ம் தேதி முதல் 20 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் மைனா நந்தினியும் இணைந்திருந்தார்.

இரண்டு நாட்கள் அமைதியாக சென்ற பிக் பாஸ் வீடு இதன் பிறகு டாஸ்க்குகள் ஆரம்பித்ததுடன் வேற லெவலில் எனர்ஜி ஏற்றியது. முதல் வாரத்தில் சாந்தி, சென்ற வாரத்தில் அசல் உள்ளிட்டோர் எலிமினேஷனில் செய்யப்பட்டனர். முன்னதாக நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஜி பி முத்து தனது மகனின் உடல்நிலை காரணமாக தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டார்.

தற்போது இந்த வீட்டில் 18 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் இந்த வார நாமினேஷனுக்காக ஆயிஷா, அசீம், செரீனா, கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்ஷன் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பேசிய வார்த்தைகளால் நாமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக போட்டியாளர்களும், பிக் பாஸும் தெரிவிக்க இந்த ஐந்து போட்டியாளர்களும் அதிர்ந்து போயினர்.

Related Video