Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் அதே தப்பை செய்த அசீம்... ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுவாரா கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியாளர்களிடம் இருந்து ரெட் கார்டு பெற்ற அசீம், இந்த வாரம் கமலிடம் இருந்து அந்த கார்டை பெறுவார் என்பது போல் தெரிகிறது.

தொகுப்பாளர் அசீம், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். கடந்த இரு வாரங்களாக இவரின் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் ஆயிஷாவுடன் சண்டயிட்டு அவரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கிய அசீமுக்கு போட்டியாளர்கள் அனைவரும் ரெட் கார்டு கொடுத்தனர்.

கமலும் எச்சரித்திருந்தார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத அசீம், இந்த வாரமும் அதே தவறை மீண்டும் செய்து வருகிறார். தற்போது அமுதவாணனை போடா... வாடா என ஒருமையில் பேசி அவரை கிண்டலடித்து அசீம் பேசுவது சக ஹவுஸ்மேட்ஸுக்கே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நிலை தான் ரசிகர்களுக்கு உள்ளது. இதனால் இந்த வாரம் கமல்ஹாசன் அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் ரெட் கார்டு பெற்று வெளியேறும் இரண்டாவது போட்டியாளர் ஆவார் அசீம். இதற்கு முன் சரவணன் இவ்வாறு வெளியேற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... டேஞ்சர் ஜோனில் மூன்று பேர்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது இவரா?

Video Top Stories