கடலூர் பாதிரிக்குப்பத்தில், தனது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரசாத் என்பவரை கவிப்பிரியா என்ற பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிக்க கவிப்பிரியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி.டி.செல்வகுமார் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்புபவர்கள் வருகின்ற 14ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பாஜக முன்னாள் நிர்வாகியும், பெண் தாதாவுமான அஞ்சலைக்கு, கந்துவட்டி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
என்னுடைய நேருக்கு நேர் நேர்காணலில் நான் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி வழக்கம் போல் சிலர் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். அதன் காரணமாக, நான் மதிக்கும் அந்த சமூக மக்கள் வேதனைப் படுவது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது.
இந்த நடவடிக்கைகள், இது தமிழக கலாச்சாரத்தின் மீதான மரியாதையா அல்லது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பாஜகவின் அரசியல் வியூகமா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் எந்தவிதமான பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது. மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்தது.
திமுகவை நத்திப் பிழைப்பதற்காக தமிழக அரசியலில் குட்டிச் சுவராகிப் போன வைகோ, விஜய் என்ற கோபுரத்தின் மீது கல்லெறிகிறார். நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் அட்டை திருத்த முகாமை நடத்தி வருகிறது. அதன்படி, டிசம்பர் 13 அன்று நடைபெறவுள்ள முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமித்ஷா கர்வத்தோடும் அகந்தையோடும் திமுகவை துடைத்தெறிவோம் என்கிறார். இவரை விட பெரியவர்களாலயே திமுகவை அசைத்து பார்க்க முடியவில்லை. அமித்ஷா நாவடக்கத்துடன் பேச வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
Tamil Nadu News in Tamil - Get breaking news, latest updates on politics, events, government schemes, and district news from across Tamil Nadu on Asianet News Tamil. தமிழ்நாடு அரசியல், சமூகம், பொருளாதாரம், மாவட்ட செய்திகள்.