- Home
- Tamil Nadu News
- ஆண்டின் கடைசி நாளில் இப்படியா..! தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை தெரியுமா?
ஆண்டின் கடைசி நாளில் இப்படியா..! தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை தெரியுமா?
தமிழகம் முழுவதும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கோவை, தருமபுரி, மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும்.

துணை மின் நிலையங்கள்
தமிழகம் முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
எந்தெந்த பகுதிகளில் மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள்அறிவிக்கப்படும். அதன்படி 2025ம் ஆண்டின் இறுதி நாளான இன்று தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேசன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தருமபுரி
பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகமரை, நெருப்பூர், திகிலோடு, பி.அக்ரஹாரம், நாகாதாசம்பட்டி, தாசம்பட்டி, பிக்கிலி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
பெரம்பலூர்
பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

