MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குட்நியூஸ்.! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த மாவட்டங்களில் விளாசப்போகுது தெரியுமா?

குட்நியூஸ்.! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த மாவட்டங்களில் விளாசப்போகுது தெரியுமா?

வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 29 2025, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
Image Credit : our own

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திரா பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டெல்டா மாவட்டங்களில் மழை
Image Credit : Google

டெல்டா மாவட்டங்களில் மழை

இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இரவு/ அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

35
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இரவு முதல் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

டிசம்பர் 31 முதல் ஜனவரி 02ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

45
உறைபனி எச்சரிக்கை
Image Credit : our own

உறைபனி எச்சரிக்கை

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல் இன்று முதல் 31ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.

குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

இன்று முதல் 31ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

55
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு முதல் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு முதல் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை
தமிழ்நாடு மழை
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Schools: இனி இந்த கட்டணத்தை வாங்க கூடாது.. முதல்வர் விஜய் ஆட்சியில் மாணவர்களுக்கு நிம்மதி
Recommended image2
School Holiday: மாணவர்களுக்கு இன்று ஜாலி நியூஸ்! கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Recommended image3
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Related Stories
Recommended image1
ஜனவரி 2ம் தேதி விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு.!
Recommended image2
விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved