திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த போதை ஆசாமி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
வாலாஜா பேட்டை அருகே 4 சிறுமிகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நான்கு சிறுமிகளையும் வேலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 1 டன் அளவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலை போன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதிமுகவை ஆதரிப்பதாக இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.
பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அருகே இறந்து கிடந்த நபருக்கு இஸ்லாமியர்கள், இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை கொன்று தோல் உரித்து சமைத்து சாப்பிட்ட நபரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவன் 4 மாத கர்ப்பிணியை கத்தியால் குத்திய நிலையில் இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
ஜோலார்பேட்டை அருகே பீடி சுற்றும் கூலி தொழிலாளிக்கு ரூ.40 கோடி ஜிஎஸ்டி பாக்கி உள்ளதாக வந்த கடிதத்தால் அதிச்சி அடைந்த பெண்மணி காவல் துறையில் முறையிட்டுள்ளார்.
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் அவர்கள் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டார்.
Vellore News in Tamil - Get the latest news, events, and updates from Vellore district on Asianet News Tamil. வேலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.