Asianet News TamilAsianet News Tamil

மதுபோதையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த ஆசாமி கீழே விழுந்து காயம்; திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த போதை ஆசாமி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

drunk young man fell down from government bus in tirupattur district vel
Author
First Published Jun 18, 2024, 10:33 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் அரசு பேருந்து (பேருந்து தடம் எண் :84) மாலை 6.30 மணிக்கு ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து உமராபாத் வழியாக பேரணாம்பட்டு சென்றது. அப்போது பைபாஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மது போதையில் ஏறிய இளைஞர் ஒருவர் படிக்கட்டிலேயே நின்று பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து பைபாஸ் சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் சென்ற சிறிது நேரத்திலேயே படிக்கட்டில் நின்று  பயணம் செய்த போதை இளைஞர் ஓடும் பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்துள்ளார். 

அந்தியோதயா ரயிலில் ஒரிஜினல் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கேட்டு வசமாக மாட்டிய போலி TTR

இதனைக் கண்ட பொதுமக்கள் மீட்டு அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது மது போதையில் அரசு பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஆம்பூர் மாங்காதோப்பு மூன்றாவது தெருவை சேர்ந்த இஸ்மாயில் எனவும், இவர் பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றபோது அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவங்க பண்றாங்களோ இல்லையோ, நீ நல்லா பண்றியேமா; சசிகலா பேட்டியில் கவனம் ஈர்த்த பெண்

தலையில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய அவர் அதே பேருந்தில் ஏறி மீண்டும் பயணம் செய்ததால் சில மணி நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆம்பூர் பைபாஸ் சாலையில் சாலையோரம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி விடுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், இதனால் அங்குள்ள வணிகர்களுக்கு சிரமம் ஏற்படுதாகவும் கூறப்படும் நிலையில் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர் சாலையோரம் நிறுத்தி வைக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios