- Home
- Tamil Nadu News
- வேலூர்
- லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
வேலூர் மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காட்பாடி, சத்துமதுரை, பள்ளூர், தக்கோலம், காந்திநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

மாதாந்திர பராமரிப்பு
தமிழகம் முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை வேலூர் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கீழ்பள்ளிபட்டு
சத்துமதுரை
அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்.
கீழ்பள்ளிபட்டு
கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் அடங்கும்.
பள்ளூர்
காட்பாடி
காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பவர் கட் செய்யப்படும்.
பள்ளூர்
சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தக்கோலம்
புன்னை
நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ்துறை, மேலதுறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் அடங்கும்.
தக்கோலம்
அரிகிலபாடி, காஞ்சிபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.
காந்திநகர்
லட்சுமிபுரம், ராதாகிருஷ்ணா நகர், 12வது கிராஸ் காந்திநகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம்நகர், காங்கேயநல்லூர் கிராமம், சிட்கோ இண்டஸ்ட்ரியல், வைபவ்நகர், வெள்ளக்கல்மோடு, 8வது கிழக்கு பிரதான சாலை, வி.ஜி.ராவ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

