- Home
- குற்றம்
- இதெல்லாம் ரொம்ப தப்புடா! என் ஆளையே உஷார் பண்ண பாக்குறியா! இறுதியில் கல்லூரி மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி! வெளியான பகீர்!
இதெல்லாம் ரொம்ப தப்புடா! என் ஆளையே உஷார் பண்ண பாக்குறியா! இறுதியில் கல்லூரி மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி! வெளியான பகீர்!
Vellore College Student: வேலூரில் கல்லூரி மாணவர் டேனி வளனரசு, காதல் தகராறில் நண்பர்களால் கொலை செய்யப்பட்டார். புத்தாண்டு அன்று மதுபோதையில் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்து, சடலத்தை ஆந்திர எல்லையில் வீசியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் டேனி வளனரசு(19). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்களான ஆரணியை சேர்ந்த கிஷோர்கண்ணன்(19), புதுச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி(19), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இன்பவர்மா(18) ஆகியோர் வேலூர் சாய்நாதபுரத்தில் வீடு வாடகை எடுத்து கல்லூரியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் கல்லூரியில் செமஸ்டர் விடுமுறை என்பதால் அவரவர் சொந்த ஊருக்கு சென்றனர். ஆனால் விடுமுறைக்கு முன்பாக டேனி வளனரசு கடந்த 31ம் தேதி இரவு வேலூருக்கு வந்துள்ளார். ஆனால் வந்து சேர்ந்ததாக பெற்றோருக்கு போன் செய்யவில்லை. இதனால் மகனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரது பெற்றோர், நண்பர்களிடம் தொடர்பு கொண்ட போது சரிவரி பதில் சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த டேனி வளனரசுவின் பெற்றோர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து கிஷோர்கண்ணனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. புதுச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி, தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவி மீது டேனிவளனரசுவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் தொடர்ந்து தனது காதலை வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.
இதையறிந்த பார்த்தசாரதி மற்றும் கிஷோர்கண்ணன் இருவரும் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய கிஷோர், பார்த்தசாரதி திட்டமிட்டனர். அதன்படி கடந்த 1ம் தேதி புத்தாண்டு தினத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் இருந்த டேனி வளனரசுவை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை ஆந்திர எல்லைக்கு எடுத்துச் சென்று மலை அடிவாரத்தில் வீசியது தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான பார்த்தசாரதியை தேடி தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

