அதிமுக அழிந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் அரசியலில் என்னுடைய ரீ எண்ட்ரி ஆரம்பமாகிவிட்டது என சசிகலா ஆக்ரோஷமாக பேசிய நிலையில், அவர் அருகில் இருந்த பெண் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு பரிவுகள் ஏற்பட்டு பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா, கே.சி.பழனிசாமி என பலரும் பல்வேறு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்த நிலையில் அதிமுக மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

YouTube video player

இதனிடையே ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நேற்ற முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நான் பொதுவாகவே அதிகம் பேச மாட்டேன். அளவாக தான் பேசுவேன். நான் பேசவேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது. இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதிமுக அழிந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். அரசியலில் எனது ரீ எண்ட்ரி ஆரம்பமாகிவிட்டது. நான் எப்பொழுதும் ஜாதி பார்த்து பழக மாட்டேன். அப்படி ஜாதிபார்த்து பழகுவதென்றால் பழனிச்சாமியை முதல்வராக்கி இருக்க மாட்டேன்.

Scroll to load tweet…

Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பல இடங்களில் மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கு சென்றுள்ளது. விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் என்று மக்களிடம் கருத்து கேட்க உள்ளேன். எதிர்க்கட்சித் தலைவர் முறையாக செயல்படவில்லை என்றால் நான் எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்பேன் என தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் இடம் பெற்றிருந்த பெண் ஒருவர் சசிகலா பேச பேச தொடர்ந்து தனது முக அசைவுகளால் பிறரது கவனத்தை ஈர்த்து வந்தார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இளைஞர்கள் அந்த வீடியோவை ட்ரோல் செய்து வருகின்றனர்.