Asianet News TamilAsianet News Tamil

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக.வுக்கு ஆதரவு - இந்திய குடியரசு கட்சி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலை போன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதிமுகவை ஆதரிப்பதாக இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

Tamilarasan said that BJP's job is to saffronise the country vel
Author
First Published Jun 13, 2024, 6:28 PM IST | Last Updated Jun 13, 2024, 6:28 PM IST

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இந்திய குடியரசு கட்சியின் சார்பில் பாராளுமன்ற வளாகத்தில் இருந்த டாக்டர் அம்பேத்கரின் சிலையை அப்புறப்படுத்திய மத்திய அரசை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையை அகற்றிய மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக கொண்டு வரும் அழிவு திட்டங்களை ஆதரிப்பதை நிறுத்துங்கள் - அரசுக்கு எதிராக சீமான் காட்டம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறி அன்பரசன், ஜனநாயகத்தின் மகுடமாக இருக்கக்கூடிய அம்பேத்கர் சிலையை அறிவிப்பு ஏதும் இல்லாமல் பாஜக அரசு அகற்றி உள்ளது. இதை மிகவும் ரகசியமாக இந்த அரசு செய்துள்ளது. இனிமேல் இந்தியாவை பீம் தர்மம் ஆளும். பீம் தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக மோடி இதைச் செய்துள்ளார். மீண்டும் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும். 

ஓட்டை, உடைசலுடன் அரசுப் பேருந்துகள்; பெண்களுக்கு இலவச பயணம் என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கும் அரசு

இந்த நாடு காவிமயமாக மாற வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது போன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதிமுகவை ஆதரிக்கிறோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்களும் நினைப்பது மறைக்கப்படாத உண்மையாகும் எனக் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios