பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் கிரிவலப் சுற்றுவட்டப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன.