அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.

Share this Video

திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாசலேசுவரர் திருக்கோயிலின் காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் நான்கு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கார்த்திகை தீப திருவிழா வான வேடிக்கையுடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபட்டனர்.

Related Video