விண்ணை முட்டும் அரோகரா கோஷம்.. அஷ்ட லிங்கங்கத்திற்கும் வெகு விமர்சியாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.!
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் கிரிவலப் சுற்றுவட்டப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன.
அருணாசலேஸ்வரர் கோவிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்கத்திற்கும் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் கிரிவலப் சுற்றுவட்டப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும், சூரியலிங்க சன்னதி, சந்திரலிங்க சன்னதிகளும் வழிபாட்டுக்கு உரியதாகும்.
இதையும் படிங்க;- சேலம் கோட்டை மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்; லட்சக்ககணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இந்நிலையில், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பணிகள் தொடங்கி நிறைவு பெற்றது.
இதையும் படிங்க;- சனிக்கிழமையன்று தவறுதலாக இந்தப்பொருட்களை வாங்காதீர்கள்; இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திபீர்.. ஜாக்கிரதை!
இதனையடுத்து அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், சந்திர லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய அஷ்ட லிங்கங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வருண லிங்கம் திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூன்று கால யாகம் நடைபெற்று பூர்ணாஹுதி செய்து பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்ட கலசத்தை திருக்கோவிலை சுற்றி எடுத்து வந்து கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று விண்ணை முட்டும் அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.