கோவை மேயர் கல்பனாவைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனும் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ஒரே நாளில் திமுக.வின் இரு மேயர்கள் ராஜினாமா செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய ரீதியிலான மோதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபருக்கு உதவி செய்யாமல் அவரது சட்டை பையில் பணம், செல்போன் உள்ளதா என நபர் ஒருவர் துழாவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையில் பைக்கில் வந்த ஒருவரை மாடு முட்டியதால், அவர் பேருத்துச் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்தின் எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகம் மாடு வளர்ப்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சண்டையிட்ட இரண்டு மாடுகள் சாலையின் குறுக்கே ஓடியது. மாடுகள் இருசக்கர வாகனத்தில் மோதி அதனால் நிலை குலைந்த வேலாயுதராஜ் சாலையின் கீழே விழுந்துள்ளார். அப்போது எதிரே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
நெல்லை பேட்டை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதராஜ் (58). இவர் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோரோட்டம் இன்று நடைபெறும் நிலையில், தேரின் 4 வடங்களும் அடுத்தடுத்து அறுந்து விழுந்ததால் பக்தர்கள் வாடிய முகத்தோடு காத்திருக்கின்றனர்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக சுட்டிக் காட்டியுள்ள மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முதல்வர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்த காரணத்திற்காக இன்று பெண் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாங்குநேரி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த எம்எல்ஏ ரூபி மனோகரனை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதனால் பதில் சொல்ல முடியாமல் திணறிய எம்எல்ஏ அங்கிருந்து அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.
Tirunelveli News in Tamil - Get the latest news, events, and updates from Tirunelveli (Nellai) district on Asianet News Tamil. திருநெல்வேலி (நெல்லை) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.