Breaking: திமுக.வில் களை எடுப்பு நடவடிக்கை? கோவையைத் தொடர்ந்து நெல்லை மேயரும் திடீர் ராஜினாமா
கோவை மேயர் கல்பனாவைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனும் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ஒரே நாளில் திமுக.வின் இரு மேயர்கள் ராஜினாமா செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சியின் மேயராக திமுக.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் பொறுப்பு வகித்து வந்தார். இதனிடையே அவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக கோவை மாநகராட்சியில், மேயரின் கணவரின் தலையீடு அதிகமாக இருப்பதாக கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட மருத்துவ தேவைகளுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Breaking News: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் கல்பனா திடீர் ராஜினாமா
இதனிடையே சர்ச்சைகளுக்கு பெயர்போன திருநெல்வேலி மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கினர். மேயர் குறித்த புகார் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்க தாமதனாதால் ஆவேசமடைந்த கவுன்சிலர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராகினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திமுக மேலிடம் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவை உடனடியாக மாவட்டத்திற்கு அனுப்பி கவுன்சிலர்களை சமாதானப்படுத்திய நிகழ்வும் நடைபெற்றது. கவுன்சிலர்கள் சமாதானமடைந்தாலும் அதிருப்தி தொடர்ந்து வந்ததாகவே கூறப்பட்டது. இந்நிலையில் மேயர் சவரணன் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.