சாவு எப்படியெல்லாம் வருது பார்த்தீங்களா? எமன் ரூபத்தில் வந்த மாடு! பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் பலி!
நெல்லை பேட்டை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதராஜ் (58). இவர் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
நெல்லையில் சாலையில் சண்டையிட்ட இரு மாடுகளால் நீதிமன்ற ஊழியர் அரசு பேருந்தில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
நெல்லை பேட்டை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதராஜ் (58). இவர் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, அங்கு 4 வழிச்சாலை பணி நடைபெறுவதால் போக்குவரத்து ஒரு பாதையாக திருப்பிவிடப்பட்டது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட விஷ சாராயம் விழுப்புரம் பஸ்டாண்டில்? குடித்தவருக்கு பறிபோன கண் பார்வை? ராமதாஸ்!
அந்த சாலையில் வேலாயுதராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சண்டையிட்ட இரண்டு மாடுகள் சாலையின் குறுக்கே ஓடியது. மாடுகள் இருசக்கர வாகனத்தில் மோதி அதனால் நிலை குலைந்த வேலாயுதராஜ் சாலையின் கீழே விழுந்துள்ளார். அப்போது எதிரே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததார்.
இதையும் படிங்க: அடக்கடவுளே.. இதுக்கலாமா அம்மாவையும் தம்பியும் கொலை பண்ணுவாங்க.. சென்னையில் நடந்த பயங்கரம்..!
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேலாயுதராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து மற்றொரு சாலை பகுதியையும் திறந்து விட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.