நெல்லையில் நடந்த துயரச் சம்பவம்! மாடு வளர்ப்பவர்களுக்கு மாநகராட்சி கடும் எச்சரிக்கை!
நெல்லையில் பைக்கில் வந்த ஒருவரை மாடு முட்டியதால், அவர் பேருத்துச் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்தின் எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகம் மாடு வளர்ப்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நெல்லையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளைத் திரியவிட்டால் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை மாநகராட்சியில் பல இடங்களில் சாலையில் மாடுகள் சுற்றி திரிகின்றன. எந்நேரமும் மாநகரப் பகுதிகளில் உள்ள முக்கியப் பகுதிகளில் மாடுகள் உலா வருகின்றன. குறிப்பாக பரபரப்பான கடைவீதிகளிலும் காய்கறி சந்தையிலும் காய்கறி மற்றும் பழக் கழிவுகளைத் தின்கின்றன.
இவ்வாறு சாலையில் ஹாயாக சுற்றித் திரியும் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. கடைத்தெருவில் வியாபாரிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்துகின்றன. வாடிக்கையாளர்களையும் முட்டித் தள்ளிவிடுகின்றன. சில இடங்களில் மாடுகள் ஒரு கூட்டமாகக் கூடி வழியை மறித்து நின்று இடைஞ்சல் போக்குவரத்துக்கு பண்ணுகின்றன.
நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாகப் பேசிய இனியவனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
போக்குவரத்து இடையூறாக உள்ள இந்த மாடுகளால் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்துச் சென்று, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.ழ
இந்நிலையில், சாலையில் மாடுகளை திரியவிடுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒற்றை நெல்லை மாநாகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாடு வளர்ப்போர் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாநகராட்சி அவற்றைப் பிடித்துச் சென்றுவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் பிரதான சாலையில் 2 மாடுகள் சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை மாடுகள் முட்டித் தள்ளின. தடுமாறி கீழே விழுந்த வேலாயுத ராஜ் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விபத்தின் எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகம் மாடு வளர்ப்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது மட்டுமின்றி, இன்று ஒரே நாளில் நெல்லை மாநகராட்சிப் பகுதி சாலைகளில் உலா வந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிடன் உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 13,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தப்பே நடக்கவில்லை என்று உருட்டிய அமைச்சர்... ஒரு வாரத்தில் சிபிஐ விசாரணை!