பிரதமர் மோடி இன்று காலை திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பிறகு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடினர்.
3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் சென்றுள்ளார்.
ராமநாதபுரத்தில் கிராம மக்கள் சார்பாக 7 சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமியும் அம்மனும் நேரடியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
தமிழக அரசின் சீரமைப்பு பணிகள் காரணமாக பார்த்திபனூர் மதகணை கால்வாயில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மழைக்காலத்தில் நீரில் மிதக்கும் ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் நள்ளிரவில் கோரிக்கை மனு அளித்தனர்.
பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரத்தையும், மண்டபத்தையும் இணைக்கும் புதிய பாம்பன் பாலம் புதுப்பொலி பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் அந்தப் பாலம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியிருக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Ramanathapuram News in Tamil - Get the latest news, events, and updates from Ramanathapuram (Ramnad) district on Asianet News Tamil. ராமநாதபுரம் (ராம்நாடு) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.